காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் பலி.. மேற்கு கரையில் 5000 பேர் வீடுகளை விட்டு கட்டாய வெளியேற்றம்

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காசா
Published on: 
Summary

காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு காசாவில் நேற்று காலை நடந்த டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸுக்கு மேற்கே அமைந்துள்ள மனிதாபிமான பாதுகாப்பு மண்டலமான அல் மவாசியில் இஸ்ரேலிய டிரோன் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

வடக்கு காசாவில் நகரின் ரிமால் பகுதியில் தாஜ் மால் அருகே கூடியிருந்த மக்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு குழந்தை உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, காசா நகரில் டெல் அல் ஹவா பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கு கரை

மேலும், மேற்குக் கரை நகரமான ஹெப்ரோனில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் முற்றுகையால் 537 பாலஸ்தீனியக் குடும்பங்களை சேர்ந்த சுமார் 3,300 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அங்கு 10வது நாளாக தொடரும் ராணுவ நடவடிக்கையால் சுமார் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அங்கு ஒரு நாளைக்கு 3.8 மில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

X