

அதிகாலை அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, தாயிப்-ரானியா நெடுஞ்சாலையில் கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 நர்சுகள் மற்றும் காரை ஓட்டிய சவூதி அரேபியா டிரைவர் என 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் அயர்குன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிமோல் மேத்யூ (வயது 46), குருமநல்லூரை சேர்ந்தவர் ஜோபினா ஜோனி. இவர்கள் இருவரும் சவுதி அரேபியா நாட்டில் நர்சுகளாக பணியாற்றி வந்தனர். இவர்களுடன் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஹெப்சிபா தேவமணி (33), அண்ணா சத்யா நகரை சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ் (37) ஆகியோரும் நர்சு பணியில் இருந்தனர்.
இவர்களுக்கு நேற்று விடுமுறை என்பதால் 4 பேரும் ஒரு காரில் பொருட்கள் வாங்க அருகில் உள்ள நகரத்திற்கு சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, தாயிப்-ரானியா நெடுஞ்சாலையில் கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 நர்சுகள் மற்றும் காரை ஓட்டிய சவுதி அரேபியா டிரைவர் என 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்.