பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய இந்தியா வருகிறது 300 பேர் கொண்ட கனடா வர்த்தக குழு

இந்தியா- கனடா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.
Maninder sidh
Published on: 

அமெரிக்காவின் மில் வாக்கியில் நடந்து வரும் ஜி-20 அமைப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உள்ளார்.

அவர் பல்வேறு நாட்டு அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கனடாவின் வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்துவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா- கனடா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்காக கனடா அமைச்சர் மனிந்தர் சித்து தலைமையில் 300 பேர் கொண்ட குழு இந்த மாதம் இந்தியாவுக்கு வர உள்ளது.

இதுதொடர்பாக மனிந்தர் சித்து கூறியதாவது:-

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் தொடர்புகளை ஏற்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறியவும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முக்கியத் துறைகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களின் சுமார் 300 கனடா பிரதிநிதிகளை உள்ளடக்கிய டீம் கனடா வர்த்தகக் குழுவை இந்த மாதம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன்.

கனடா நிறுவனங்கள் இந்தியாவில் கூட்டாண்மைகளை உருவாக்கவும் வளர்ச்சியை அடையவும் நாங்கள் உதவுகிறோம். வருகிற 5-ந்தேதி தொடங்க உள்ள அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைக்கு முன்னதாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கான நடவடிக் கைகளை முன்னெடுக்கும் வகையில் பியூஷ் கோயலை மீண்டும் சந்தித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com