VIDEO: 16வது மாடியின் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சுட்டிக்குழந்தை: பதைபதைக்கும் காட்சி

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர், மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது.
3-Year-Old Girl Dangling from 16th Floor Rescued in China
Published on: 
Summary

சீனாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 16வது மாடியின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மூன்று வயது பெண் குழந்தை ஒன்று சிக்கிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் புஜியான் மாகாணத்தின் ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கணவர், மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது.

காய்கறி வாங்க சென்ற தாய்

இதையடுத்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அன்று, கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த வீட்டில் மூன்று வயது பெண் குழந்தை தனது அம்மாவுடன் இருந்துள்ளது.

அப்போது அந்த குழந்தை காலை சாப்பிட்டு முடித்துவிட்டு அசந்து தூங்கிய நேரத்தில், காய்கறிகளை வாங்கி வருவதற்காக அருகில் உள்ள கடைக்கு குழந்தையின் அம்மா சென்றுள்ளார்.

இதையடுத்து அம்மா வெளியே சென்றவுடன் திடீரென்று எழுந்த அந்த சுட்டி குழந்தை, தனது வீட்டின் முன்புறத்தில் உள்ள இரும்பு கம்பி வழியாக வெளியே செல்ல முயன்றுள்ளது.

சுட்டிக் குழந்தையின் செயல்

இதைத்தொடர்ந்து எதிர்பாரா விதமாக கம்பியின் வழியே வெளியே வந்த சுட்டி குழந்தை, அந்தரத்தில் தொங்கி கொண்டு அலறல் சத்தம் போட்டுள்ளது.

இதைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியே வந்த பார்த்தபோது, குழந்தை அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த அக்கம்பத்தினர், குழந்தையை மீட்பதற்காக ஒரு சிறிய நாற்காலியை குழந்தையின் பின்னால் வைத்தனர்.

இருந்தாலும் குழந்தை சற்று உயரமான இடத்தில் தொங்கி கொண்டிருந்ததால், அவர்களால் குழந்தையை பத்திரமாக மீட்க முடியாமல் போனது.

குழந்தை மீட்பு

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது அவர்கள் வீட்டின் முன்புறம் இருந்த இரும்பு கம்பியை அறுத்து, 16வது மாடியின் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com