

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் இஸ்ரேல் ராணுவத்தில் தற்கொலைகள் பதிவாகி உள்ளன.
மேலும், 2026ஆம் ஆண்டில் 5 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் பதிவான தற்கொலைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது என இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
போருக்கு முந்தைய பத்தாண்டுகளில், ராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 தற்கொலைகள் நிகழ்ந்தன.