நோ சொல்ல மனசு இல்லை..21 மனைவிகள்..பெயரே மறந்து போச்சு!- வங்கதேச பிச்சைக்காரரின் விசித்திரக் காதல் புராணம்!

தினமும் பிச்சை எடுக்கச் செல்லும்போது சுழற்சி முறையில் தன் மனைவிகளில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Moru Mia
Published on: 
Summary

பத்திரிகையாளர்கள் மொரூ மியாவிடம் அவரது 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, அவரால் சில பெயர்களை மட்டுமே கூற முடிந்தது. ஷீலா, நர்கீஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா மற்றும் பாருல் ஆகிய மனைவிகளின் பெயர்கள் மட்டுமே நினைவிருப்பதாகவும், மற்றவர்களின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை என்றும் ஒப்புக்கொண்டார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மொரூ மியா என்ற நபர், 21 பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். தொழில்முறையாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வரும் இவர், தன் அனைத்து மனைவிகளின் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஊடகங்கள் மொரூ மியாவிடம், “குறிப்பாக வயதில் மூத்த பெண்கள் உங்களை ஏன் விரும்பித் திருமணம் செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், பெண்களைத் தன்னிடம் ஈர்க்கும் விஷயம் என்னவென்று தனக்கே தெரியாது என்றும், பெண்கள் அனைவரும் அவராகவே வந்து ‘நம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்’ என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் யாருக்கும் திருமணப் முன்மொழிவை அனுப்பியதில்லை என்றும், தன்னை விட வயதில் மூத்த பெண்கள் திருமண விருப்பத்துடன் வரும்போது அவர்களை ‘வேண்டாம்’ என்று மறுக்க மனமில்லாமல் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

மனைவிகளுடன் பிச்சை

காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு வேறு வாழ்வாதாரம் இன்றி பிச்சை எடுக்கத் தொடங்கிய மொரூ மியா, ஒரு சிறிய ஒற்றை அறை ஓலைக்குடிலில் வசித்து வருகிறார். தினமும் பிச்சை எடுக்கச் செல்லும்போது சுழற்சி முறையில் தன் மனைவிகளில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மனைவிகளின் பெயர்களை மறந்த மொரூ மியா

பத்திரிகையாளர்கள் மொரூ மியாவிடம் அவரது 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, அவரால் சில பெயர்களை மட்டுமே கூற முடிந்தது. ஷீலா, நர்கீஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா மற்றும் பாருல் ஆகிய மனைவிகளின் பெயர்கள் மட்டுமே நினைவிருப்பதாகவும், மற்றவர்களின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை என்றும் ஒப்புக்கொண்டார்.

தற்போது மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர், இனிமேலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்குத் தஞ்சமளிக்கும் வகையில் இவர் இவ்வாறு நடந்துகொண்டாரா அல்லது இதன் பின்னணியில் வேறு சமூகக் காரணங்கள் உள்ளதா என நெட்டிசன்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com