முழு திறமையையும் காண என்னை வேலைக்கு எடுங்கள்: பாதியிலேயே நின்ற பயோடேட்டா இணையத்தில் வைரல்!

இந்த பயோடேட்டாவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Incomplete resume
Published on: 
Summary

ஆயிரக்கணக்கான பயோடேட்டாக்கள் குவியும் இந்த காலத்தில், நிறுவன மேலாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க இது ஒரு அட்டகாசமான மற்றும் புத்திசாலித்தனமான உத்தி" எனப் பாராட்டியுள்ளனர்.

வேலை தேடும் பணியாளர் ஒருவர் தனக்கே உரித்தான பாணியில் தயாரித்த வினோதமான பயோடேட்டா ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமான கல்வித் தகுதிகள், வேலை அனுபவம் மற்றும் தொடர்பு எண்கள் எதுவுமே இல்லாத இந்த பயோடேட்டா, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ரெடிட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த பயோடேட்டா, மேல் பகுதியில் மிகச் சாதாரண குறிக்கோள்களுடன் தொடங்குகிறது. ஆனால், பக்கத்தின் நடுப்பகுதிக்கு வந்ததும் அச்சுப் பணி திடீரென நின்றது போல பாதியிலேயே முடிகிறது. அதன் தொடர்ச்சியாக, "எனது முழுமையான திறமையையும் ஆற்றலையும் நீங்கள் செய்து பார்க்க வேண்டுமானால், என்னை வேலைக்கு அமர்த்துங்கள்! என்ற வாசகம் மட்டும் இடம்பெற்றுள்ளது.

வீடியோ கேம்களில் முழு விளையாட்டை விளையாட பணம்கட்ட சொல்வது போல, தனது திறமையைப் பார்க்க வேலை தர வேண்டும் என்ற கோணத்தில் இந்த பயோடேட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோடேட்டாவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருதரப்பினர், "ஆயிரக்கணக்கான பயோடேட்டாக்கள் குவியும் இந்த காலத்தில், நிறுவன மேலாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க இது ஒரு அட்டகாசமான மற்றும் புத்திசாலித்தனமான உத்தி" எனப் பாராட்டியுள்ளனர். "நான் ஒரு நேர்காணல் நடத்துபவராக இருந்தால், நிச்சயமாக இவரை அழைத்து நேரில் பேசுவேன்" என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், மற்றொரு தரப்பினர் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். தொடர்பு எண்களோ அல்லது தகுதிகளோ இல்லாத ஒரு பயோடேட்டாவை தானியங்கி மென்பொருள்கள் உடனடியாக நிராகரித்துவிடும் என்பதால் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என வேலைவாய்ப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இது வேலை தேடுபவரின் கவனக்குறைவையோ அல்லது வெறும் இணைய மீம் கலாச்சாரத்தையோ காட்டுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com