ஏமனில் சவுதி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு.. ஏடன் விமான நிலையம் மீது ஹவுதிக்கள் தாக்குதல்

விமானமும் தாக்குதலில் சிக்காத வகையில் டேக் ஆப் ஆகி தப்பியது
ஏமனில் சவுதி தாக்குதல்
Published on: 
Summary

ஏமனில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

சவுதி தாக்குதல்

இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஆளுகையில் உள்ள ஜாப் (Jawf ) மாகாணத்தில் உள்ள சந்தை மற்றும் பெட்ரோல் நிலையம் மீது சவுதி படைகள் நடத்திய வான்வழி டிரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதிக்களின் செய்தி ஊடகமாக அல்மாசிரா தெரிவித்துள்ளது.

ஹவுதி தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னதாக சவுதி மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏமன் அரசு செயல்பட்டு வரும் ஏடன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே ஏவுகணை மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அந்த ஏவுகணை விமான நிலையத்தின் உள்ளே உள்ள விமானம் புறப்படும் பகுதியில் விழுந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே எச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் ஒரு சரக்கு விமானமும் தாக்குதலில் சிக்காத வகையில் டேக் ஆப் ஆகி தப்பியது என அரசின் கீழ் இயங்கும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் தாக்குதலுக்கான ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி தன் டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

2015 இல் ஹவுதிக்கள் தலைநகர் சனாவை கைப்பற்றியதை அடுத்து ஏடன் நகர், அரசின் தற்காலிக தலைநகரமாக செய்லபட்டு வருவதால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன.

ஏமன் அரசுக்கு உதவும் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஹவுதி தாக்குதல் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com