

அமெரிக்காவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மீராபாய் மற்றும் அவரது பயிற்சியாளருக்கு இந்திய பளுதூக்குதல் பெடரேசன் பொதுச்செயலாள் ஷாதேவ் யாதவ் பாராட்டினார். ஒலிம்பிக்கை விட பெரிய பதக்கம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றி குறித்து மீராபாய் சானு கூறுகையில், ‘எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த வெற்றியானது சாத்தியமில்லை. வெற்றியின் உச்சத்தை தொடுவதற்காக நானும் என் பயிற்சியாளரும் அனைத்து வகையிலும் முயற்சி செய்தோம்.