உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா - கனடா இன்று மோதல்

லண்டனில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொள்கிறது.
உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா - கனடா இன்று மோதல்
Published on

லண்டன் :

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்து இருந்தது. இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் மன்பிரீத்சிங் கருத்து தெரிவிக்கையில், ‘எதிர் வரும் ஆட்டங்களில் ஆக்ரோஷமாக விளையாடி லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதே எங்கள் நோக்கமாகும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com