

சாமுவேல்ஸின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை வீசினார். இங்கிலாந்து 19 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்திவிடும் என்று பலரும் நினைத்தனர்.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் நான்கு பந்துகளிலும் பிராத்வைட் இமாலய சிக்சர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற வைத்தார்.
பென் ஸ்டோக்ஸ்க்கு இது மிகப்பெரிய அளவில் மோசமான நாளாக அமைந்தது. இங்கிலாந்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் பென் ஸ்டோக்ஸ் இழக்க வைத்துவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் விமர்சனத்தில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகின. அதன்பின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் 84 ரன்கள் குவித்து போட்டி ‘டை’ஆக முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடிக்க துருப்புச் சீட்டாக இருந்தார்.