உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று- ஸ்காட்லாந்து வெற்றிக்கு 199 ரன்கள் நிர்ணயித்தது வெஸ்ட்இண்டீஸ்

உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணி 199 ரன்கள் நிர்ணயித்துள்ளது. #CWCQ #WIvSCO
உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று- ஸ்காட்லாந்து வெற்றிக்கு 199 ரன்கள் நிர்ணயித்தது வெஸ்ட்இண்டீஸ்
Published on

உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் இன்று மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் களமிறங்கினார்கள். முதல் ஓவரை வீச வந்த சப்யான் ஷரீப், முதல் பந்திலேயே அதிரடி வீரரும், சிக்சர் மன்னனுமான கிறிஸ் கெயிலை வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஷை ஹோப் 6 பந்துகள் எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவரது விக்கெட்டையும் ஷரீப் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய சாமுவேல்ஸ், லீவிசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். 3-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 198 ரன்கள் சேர்த்தது.

ஸ்காட்லாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் சப்யான் ஷரீப், பிராட்லி வீல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com