உலகக்கோப்பை இறுதிப் போட்டி- 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா

பிரான்ஸ் - குரோசியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா #WorldCup2018 #FRACRO
உலகக்கோப்பை இறுதிப் போட்டி- 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா
Published on

8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. 11-வது நிமிடத்தில் மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றுவிட்டது. பிரான்ஸ் வீரர்களிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

14-வது நிமிடத்தில் பெர்சிச் பந்தை சிறப்பாக கொண்டு சென்றார். அனால் உமிதித் அதை தடுத்தார். 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி தடுக்க முயன்றார் குரோசியா வீரர் மேண்ட்சுகிச். ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com