உலகக்கோப்பை கால்பந்து 2018- எகிப்தை 1-0 என வீழ்த்தியது உருகுவே

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என எகிப்தை உருகுவே வீழ்த்தியது. #WolrdCup2018
உலகக்கோப்பை கால்பந்து 2018- எகிப்தை 1-0 என வீழ்த்தியது உருகுவே
Published on

இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள எகிப்து - உருகுவே அணிகள் மோதின. எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா காயத்தால் இடம்பெறவில்லை. உருகுவே அணியில் சுவாரஸ் மற்றும் கவானி இடம்பிடித்திருந்தனர்.

ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் ஆட்டத்திற்கு சாலா இல்லாத எகிப்து அணி ஈடுகொடுத்து விளையாடுயது. இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

2-வது பாதி நேரத்திலும் உருகுவே அணியில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்ததால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 89-வது நிமிடத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து உருகுவே அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. கார்லோஸ் சான்செஸ் பந்தை தூக்கி அடிக்க, மரியா கிமேனெஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் உருகுவே 1-0 என முன்னிலைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com