

இந்த தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டது. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய பிபா ஏற்பாடு செய்தது. இதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்களித்தனர்.
இதில் அர்ஜென்டினாவிற்கு எதிராக நாக்அவுட் போட்டியில் பிரான்ஸ் வீரர் பெஞ்ஜமின் பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாக்அவுட் சுற்றில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் பவார்டு அடித்த அற்புதமான கோலால் பிரான்ஸ் 2-2 என சமநிலைப் பெற்றது. இதன்பின் பிரான்ஸ் 4-2 என வெற்றி பெற்றது. பவார்டின் கோல்தான் பிரான்ஸ் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ஜப்பானுக்கு எதிராக கொலம்பியா வீரர் குயின்டேரோ அடித்த கோல் 2-வது இடத்தையும், அர்ஜென்டினாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் அடித்த கோல் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
🚀🇫🇷OFFICIAL: @BenPavard28's stunning goal for @FrenchTeam v Argentina has been chosen as the @Hyundai_Global#WorldCup Goal of the Tournament!https://t.co/U0WEmz7dOMpic.twitter.com/BnsbNWoCKI