உலக கார் இல்லாத தினம்... சைக்கிளில் தலைமைச் செயலகம் சென்ற அரியானா முதல்வர்

உலக கார் இல்லாத தினத்தையொட்டி மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சைக்கிள் ஓட்டிச் சென்ற அரியானா முதல்வர் கட்டார்
சைக்கிள் ஓட்டிச் சென்ற அரியானா முதல்வர் கட்டார்
Published on

சண்டிகர்:

ஆண்டுதோறும் செப்டம்பர் 22ம் தேதி ‘உலக கார் இல்லாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் வகையிலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார்  வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அவ்வகையில் இன்று உலக கார் இல்லாத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது  வீட்டில் இருந்து, சைக்கிளில் தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com