திருப்பூரில் குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூரில் குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழப்பு
Published on

திருப்பூர்:

திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). பனியன் தொழிலாளி. நேற்று மாலை வேலை முடிந்து நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் குளத்தில் குளிக்க சென்றார்.

நண்பர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அரைகுறையாக நீந்த தெரிந்த பழனிசாமி ஆர்வத்தால் இவரும் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மூழ்க தொடங்கினார். அதை அறிந்த அவர் அலறி சத்தம்போட்டார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பழனிசாமியை காப்பாற்ற முயன்றனர். பழனிசாமியை கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com