ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்- இந்திய அணி 66 ரன்னில் தாய்லாந்தை வீழ்த்தியது

ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. #WomensCricket #AsiaCup #India
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்- இந்திய அணி 66 ரன்னில் தாய்லாந்தை வீழ்த்தியது
Published on

கோலாலம்பூர்:

ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது.

முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. மோனா மேஸ்ரம் 32 ரன்னும், கம்ரிதா மந்தனா 29 ரன்னும் கேப்டன் கவூர் 17 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தாய்லாந்து அணியால் இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்னே எடுக்க முடிந்தது.

இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும்.

கவூர் 3 விக்கெட்டும், தீபதி சர்மா 2 விக்கெட்டும், பூஜா, பூமை யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை- மலேசியா மோதும் ஆட்டம் பிற்பகலில் நடக்கிறது.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. நாளை ஒய்வு நாளாகும்.#WomensCricket #AsiaCup #India

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com