3.2 ஓவரில் ரன்ஏதும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த தெ.ஆ. வீராங்கனை

பெண்கள் உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3.2 ஓவரில் ரன்ஏதும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார் தென்ஆப்பிரிக்க வீராங்கனை.
3.2 ஓவரில் ரன்ஏதும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த தெ.ஆ. வீராங்கனை
Published on

ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. லெய்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் மேத்யூஸ், பாய்ஸ் தலா நான்கு ரன்களுடன் வெளியேறினார்கள். அடுத்து வந்த கேப்டன் டெய்லர் 26 ரன்கள் அடித்தார். அவருக்குப் பின் வந்த மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 25.2 ஒவரில் 48 ரன்னில் சுருண்டது. ஐந்து வீராங்கனைகள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார்கள்.


க்ளீன் போல்டாகிய மெரிஸா

தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக லெக்பிரேக் சுழற்பந்து வீராங்கனை வான் நிகெர்க் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். 20-வது ஓவரை வான் நிகெர்க் வீசினார். முதல் ஐந்து பந்தில் ரன்ஏதும் கொடுக்காத வான் நிகெர்க், கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 21-வது ஓவரை வான் நிகெர்க் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மற்றொரு விக்கெட் வீழ்த்தினார். மற்ற பந்துகளில் ரன்ஏதும் கொடுக்கவில்லை.

24-வது ஓவரை வான் நிகெர்க் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். மற்ற பந்துகளில் ரன்ஏதும் கொடுக்கவில்லை. இதனால் 3 ஓவர்களில் ரன்ஏதும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


ஸ்டம்பை பறிகொடுக்கும் ப்ளெட்சர்

26-வது ஓவரை வான் நிகெர்க் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்னில் சுருண்டது. வான் நிகெர்க் 3.2 ஓவரில் (20 பந்தில்) ரன்ஏதும் கொடுக்காமல் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு வீராங்கனை மரிஷன்னே காப் நான்கு விக்கெட்டுக்களும், இஸ்மாயில் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 6.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வால்வார்த்ட் 19 ரன்னுடனும், லீ 26 பந்தில் 29 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com