பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - சூப்பர் நோவாஸ் அணி வெற்றி

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WomenT20 #Velocity #Supernovas
சூப்பர் நோவாஸ் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்தை அடித்து ஆடுகிறார்.
சூப்பர் நோவாஸ் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்தை அடித்து ஆடுகிறார்.
Published on

3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன.

‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேனிலி வியாத் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜ் 40 ரன்னுடனும், வேதா கிருஷ்ணமூர்த்தி 30 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லீக் ஆட்டங்கள் முடிவில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி, மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

ரன்-ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டிரைல் பிளாசர்ஸ் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டி ஜெய்ப்பூரில் நாளை இரவு நடக்கிறது. #WomenT20 #Velocity #Supernovas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com