பீகார் - டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்

பீகாரில் உள்ள மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை அளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar #Sadarhospital
பீகார் - டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சையின்போது மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுதொடர்பான வீடியோ இணைய தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அதில், மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிபட்டுள்ளது. அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருக்க, அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த நபர் சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சதார் மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #bihar #Sadarhospital #tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com