போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் சூப்பிரண்டு மாற்றம்

போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Vishakacommittee
போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் சூப்பிரண்டு மாற்றம்
Published on

சென்னை:

சென்னையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அதிகாரிகள் இருவரும் ஒரே துறையில் பணியாற்றினர். அப்போது ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்த அதிகாரி பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Vishakacommittee

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com