தோகைமலை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

தோகைமலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் திருமலைநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஹரிதா (வயது 21). சம்பவத்தன்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் வேதனை தாங்காமல் சத்தம்போட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டுசிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com