ஓட்டேரியில் பெண் போலீஸ் தற்கொலை

சென்னையில் காதல் விவகாரத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரண்யா
சரண்யா
Published on

சென்னை:

சென்ட்ரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சரண்யா. (வயது 21). இவர் தற்போது கொரோனா பாதுகாப்பு பணியில் பாரிமுனை பகுதியில் ஈடுபட்டிருந்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள பனந்தோப்பு காலனி குடியிருப்பில் வசித்து வந்த இவர் அங்கிருந்தே தினமும் பணிக்கு சென்று வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தான் தங்கியிருந்த அறைக்கு சரண்யா சென்றார்.

இவருக்கும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலரான ஏழுமலைக்கும் காதல் இருந்துள்ளது. நேற்று ஏழுமலைக்கு பிறந்தநாளாம். காதலனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சரண்யா கேக் வாங்கி வந்துள்ளார்.

கேக் வெட்டுவதற்காக அவரை அழைத்துள்ளார். ஆனால் காதலன் ஏழுமலை வரவில்லை. இதனால் மனம் உடைந்த சரண்யா மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் விரைந்து சென்று சரண்யாவின் உடலை கைப் பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சரண்யா 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஆவார். காதலன் ஏழுமலையும் அதே ஆண்டு தான் போலீஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் காதல் விவகாரத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com