உ.பி.யில் வரதட்சணை கொடுமையால் இரண்டரை வயது குழந்தைக்கு விசம் கொடுத்து இளம்பெண் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் இரண்டரை வயது குழந்தைக்கு விசம் கொடுத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #DowryDemand
உ.பி.யில் வரதட்சணை கொடுமையால் இரண்டரை வயது குழந்தைக்கு விசம் கொடுத்து இளம்பெண் தற்கொலை
Published on

லக்னோ:

நம் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இன்றைய நவீன உலகத்திலும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்துக்குட்பட்ட குண்டா எனும் பகுதியில் நேகா (25) என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு நேகாவை கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த நேகா இன்று காலை தனது இரண்டரை வயது பெண் குழந்தையான அன்சூவுக்கு விசம் கொடுத்து தானும் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேகாவின் கணவர் அஷோக் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தை மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #DowryDemand #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com