அருமனை அருகே கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண் பலி

அருமனை அருகே கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
அருமனை அருகே கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண் பலி
Published on: 

நாகர்கோவில்:

அருமனை அருகே இடைக்கோடு அயக்கோட்டு விளையைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வினிலா (வயது 29).

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுனில்குமார் ஊருக்கு வந்திருந்தார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவி வினிலாவிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் சுனில்குமார் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டார்.

இதனால் வினிலா, கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீ வினிலா மீது பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X