தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மீது பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ScottMorrison
பெண் வீசிய முட்டை பிரதமர் தலையில் உடையாமல் இருக்கும் காட்சி. முட்டை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
பெண் வீசிய முட்டை பிரதமர் தலையில் உடையாமல் இருக்கும் காட்சி. முட்டை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
Published on

ஆஸ்திரேலியாவில் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி என்ற இடத்தில் கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரதமர் மாரிகன் தலை மீது முட்டையை வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை அவரது தலையில் உடையவில்லை. தரையில் விழுந்து நொறுங்கியது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அப்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் அவர் எதற்காக அந்த காரியத்தில் ஈடுபட்டார் என்ற தகவலை வெளியிடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com