உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி பெண் பலி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி பெண் பலி
Published on

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் தானியங்கி கார்களும் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் அரிசோனா பகுதியில் உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அந்நிறுவனத்தின் தானியங்கி கார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com