தஞ்சை அருகே விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

தஞ்சை அருகே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on: 

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே ஆலக்குடி நடுத்தெருவை சேர்ந்த நாகராஜ் மனைவி சுலோக்சனா (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோக்சனா நேற்று சிகிச்சைபலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுலோக்சனாவின் மகன் இளஞ்சூரியன் (38) கொடுத்த புகாரின் பேரில், வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com