கூடுதல் வரதட்சணை தகராறில் கணவரை பிரிந்த பெண் தற்கொலை

கூடுதல் வரதட்சணை தகராறில் கணவரை பிரிந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை அண்ணா நகர் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 26). இவர்களது திருமணத்தின்போது 12 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில் முத்துப்பாண்டி கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த மாரியம்மாள் கணவரை பிரிந்து பொள்ளாச்சி நாயக்கன் பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு மாரியம்மாள் தற்கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com