ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கு ரூ.4000 கோடி சொத்து

மேல்-சபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கு ரூ.4,000 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனு தாக்கலில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கு ரூ.4000 கோடி சொத்து
Published on

புதுடெல்லி:

டெல்லி மேல்-சபைக்கு காலியாகும் 58 இடங்களுக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பீகாரில் இருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மகேந்திர பிரசாத் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

கிங் மகேந்திரா என்று அழைக்கப்படும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ரூ.4 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

78 வயதான மகேந்திரா பிரசாத்துதான் பணக்கார எம்.பி. ஆவார். அவருக்கு அடுத்தப்படியாகத்தான் ஜெயாப்பச்சன் உள்ளார். சமாஜ்வாடி சார்பில் நிறுத்தப்பட்ட அவரது சொத்து மதிப்பு ரூ.1000 கோடியாகும்.

மகேந்திர பிரசாத் 1985-ம் ஆண்டில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருந்து வருகிறார். 7-வது முறையாக அவர் எம்.பி.யாகுகிறார். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 3-வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com