

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்வென் கிராமர் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கிராமர் 6 நிமிடம் 09.76 வினாடிகளில் இலக்கை கடந்தார். குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் வென்ற 3-வது தங்கம் இதுவாகும். ஒரே வேகத்திலான ஸ்கேட்டிங்கில் தொடர்ச்சியாக 3-வது தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
படுத்துக்கொண்டே பனிச்சறுக்கக்கூடிய லஜ் வகை போட்டியில் இந்திய வீரரும், ஆசிய சாம்பியனுமான ஷிவ கேசவனுக்கு நேற்றைய கடைசி தகுதி சுற்றிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒட்டுமொத்த அளவில் அவர் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தனது 16-வது வயதில் குளிர்கால ஒலிம்பிக்கில் கால்பதித்த ஷிவ கேசவனுக்கு இது 6-வது குளிர்கால ஒலிம்பிக்காகும். 2006-ம் ஆண்டில் 25-வது இடம் பிடித்ததே அவரது சிறந்த செயல்பாடாகும். இமாசலபிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஷிவ கேசவன் இத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் ரெட் ஜெரார்டு அந்தரத்தில்
பாய்ந்து செல்லும் காட்சி. (உள்படம்: தங்கப்பதக்கத்துடன் ரெட் ஜெரார்டு.)