ஐஸ் ஹாக்கியில் ஸ்வீடன் அணியிடம் ஒருங்கிணைந்த கொரிய அணி படுதோல்வி

குளிர்கால ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் ஸ்வீடன் அணியிடம் இருநாட்டு வீராங்கனைகள் இணைந்த கொரிய அணி படுதோல்வி அடைந்தது. #WinterOlymics2018
ஐஸ் ஹாக்கியில் ஸ்வீடன் அணியிடம் ஒருங்கிணைந்த கொரிய அணி படுதோல்வி
Published on

குளிர்கால ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் ஸ்வீடன் அணியிடம் இருநாட்டு வீராங்கனைகள் இணைந்த கொரிய அணி படுதோல்வி அடைந்தது.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஐஸ் ஹாக்கி போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்த கொரியா அணியுடன் ஸ்வீடன் அணி மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஸ்வீடன் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஸ்வீடன் அணி 8 கோல்கள் அடித்து கொரியா அணியை எளிதில் வீழ்த்தியது

தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா மற்றும் தென் கொரியா அணிகள் இணைந்து ஒரே அணியாக களமிறங்கியது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com