விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன்
Published on

முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்-ஐ கைப்பற்றினார்கள். இதனால் 10 கேம்கள் முடிவில் இருவரும் 5-5 என சமநிலையில் இருந்தனர்.

11-வது கேம்-ஐ வீனஸ் வில்லியம்ஸ் தொடங்கினார். இதில் வீனஸின் சர்வீஸ்களை திறமையாக எதிர்கொண்டு கேம்-ஐ முகுருசா அருமையாக கைப்பற்றினார். இதனால் முகுருசா 6-5 என முன்னிலைப் பெற்றார். 12-வது கேம்-ஐ தொடங்கிய முகுருசா சிறப்பாக முடித்தார். இதனால் முதல் செட்டை முகுருசா 7-5 எனக் கைப்பற்றினார்.

முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து வீனஸ் மீள்வதற்கு நேரம் கொடுக்காமல் 2-வது செட்டில் அதிரடி தாக்குதலை நடத்தினார் முகுருசா. இதனால் ஒரு கேம்-ஐ கூட வீனஸ் வில்லியம்ஸை கைப்பற்ற விடாமல் 6-0 என 2-வது செட்டை கைப்பற்றினார் முகுருசா.

இதனால் 2-0 என நேர்செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியை பெற முகுருசாவிற்கு ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் தேவைப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com