

உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் (ஸ்பெயின்) நேற்று விம்பிள்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். டென்னிஸ் வரலாற்றில் அவர் பெற்ற 850-வது வெற்றியாகும்.
உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரான அவர் 2001-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 850-வது வெற்றியை பெற்ற 7-வது வீரர் என்ற சாதனையை நடால் பெற்றார்.
ரோஜர் பெடரர், ஜிம்மி கார்னர்ஸ், இவான் லெண்டில், ஜான் மெக்கன்ரோ, ஆந்த்ரே அகாசி, குயல்லர்மோ விலாஸ் ஆகியோருடன் நடால் இணைந்தார். 180 ஆட்டங்களில் அவர் தோற்று உள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் அவர் பெற்ற 217-வது வெற்றியாகும். 31 வயதான அவர் 15 கிராண்ட்சிலாம் பட்டங்களை (பிரெஞ்சு ஓபன் 10, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 2, ஆஸ்திரேலிய ஓபன் 1) பெற்றுள்ளார்.