10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள்: மாபியாக்களுக்கு ம.பி. மாநில முதல்வர் எச்சரிக்கை

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் 10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள் என மாபியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவ்ராஜ் சிங் சவுகான்
சிவ்ராஜ் சிங் சவுகான்
Published on

இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி தினவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ‘‘மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், 10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியாமலேயே போய்விடும்’’ என்றார்.

மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com