

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக்கும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கும் பட்டாசு சத்தம் தான் கேட்கிறது. ரம்ஜான் பண்டிகை முன்னதாக வந்துவிட்டது போல் உணர்கிறேன். அந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.