

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் நடிகை சோனாலி குல்கர்ணி. இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே சைக்கிளில் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நடிகை ஆன பிறகும் காய்கறி வாங்க, இளநீர் சாப்பிட சைக்கிளில் சென்று வருகிறார்.
இந்நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்குள் சைக்கிளில் செல்ல அனுமதி இல்லை என சோனாலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மும்பையில் ஏராளமான சைக்கிள் பிரியர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'நான் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு சைக்கிளில் செல்வேன். அதனால் எனக்கு அவமானம் இல்லை. ஆனால் சில 5 நட்சத்திர ஹோட்டல்களுக்குள் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை. கார்களை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை உள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத சைக்கிளுக்கு ஏன் அனுமதி இல்லை.