செய்திகள்
கடைசி டி20-யில் டோனியின் அறிவுரையை கேட்காத ரெய்னா
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20-யில் டோனியின் அறிவுரையை கேட்காத ரெய்னா, பவுண்டரி விட்டுக்கொடுத்தார். #SAvIND #MSDhoni
தென்ஆப்பிரிக்கா அணி தொடக்கத்தில் மந்தமாக விளையாடியது. 2-வது விக்கெட்டுக்கு மில்லர் உடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், ரெய்னா பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் சிறப்பாக பந்து வீசி 1 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் 2-வது ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்த ரெய்னா, 13-வது ஓவரை வீசினார். லெக்சைடு வீசிய இந்த ஓவரின் 4-வது பந்தை ஜோங்கர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ரெய்னாவைப் பார்த்து, பந்தை வேகமாக வீசாதே, அதேபோல் ஸ்டம்பிற்கு நேராக வீசாதே என இந்தியில் கூறினார்.

