

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவர்கள் சங்க விழா நடை பெற்றது. விழாவில், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரம்பரிய மருத்துவம் அழிந்து விடாமல் காக்க இந்திய மருத்துவ முறைகளை முறைப்படுத்த வேண்டும். டி.டி.வி. தினகரனை நாங்கள் கட்சி உறுப்பினராக கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்காக எங்கள் ஓ.பி.எஸ். அணி காத்திருக்கிறது. தீர்ப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பின்னர் ஓ.பி.எஸ். மற்றும் மதுசூதனன் ஆகியோர் முறையாக பொறுப்பேற்று தலைமை கழகத்துக்கு சென்று பணியாற்றுவார்கள்.
தலைமை கழக செயலாளராக உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கும் இடத்தில் ஓபிஎஸ் இருப்பார். தற்போது கல்வித்துறையில் நடை பெற்றுவரும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது .
இவ்வாறு அவர் கூறினார்.