மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அடியோடு சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை அடியோடு சரிந்து 16 கன அடி மட்டும் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அடியோடு சரிந்தது
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெகுவாக குறைந்தது.

நேற்று அணைக்கு 39 கன அடி தண்ணீர் வந்தது. இன்று இது காலை அடியோடு சரிந்து 16 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 64.34 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இது 64.21 அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து இதேநிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. #MetturDam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com