சென்னையில் 1000 லிட்டர் தண்ணீர் 18 ரூபாய்க்கு விற்பனை- குடிநீர் வாரியம் ஏற்பாடு

சென்னையில் தோட்டம், கழிவறை மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை 1000 லிட்டர் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #ChennaiMetroWater
சென்னையில் 1000 லிட்டர் தண்ணீர் 18 ரூபாய்க்கு விற்பனை- குடிநீர் வாரியம் ஏற்பாடு
Published on

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் குடிநீர் அல்லாத பிற தேவைகளான தோட்டத்துக்கு, கழிவறைக்கு, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேவைகளுக்காக மட்டும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிநீர் வாரியத்தின் சார்பில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீரை பெற விரும்புவோர் குடிநீர் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கொடுங்கையூர், கோயம்பேடு, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடக்கு-81449 30800, நெசப்பாக்கம், பெருங்குடி, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தெற்கு-81449 30600.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#ChennaiMetroWater

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com