

சென்னை:
மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகசெல்வி. இவர் 2009-ம்ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யாததால் வருமானவரி துறை நோட்டீஸ் அனுப்பியது.
2009-10 ம் ஆண்டு ரூ.4.48 லட்சமும், 2010-11-ம் ஆண்டு ரூ.5.76 லட்சமும், 2011-12-ம் ஆண்டு ரூ.11.42 லட்சமும், 2012-13-ம் ஆண்டு ரூ.10.34 லட்சமும், 2013-14-ம் ஆண்டு ரூ.20.17 லட்சமும், 2014-15-ம் ஆண்டு ரூ.10.82 லட்சமும், 2015-16-ம் ஆண்டு ரூ.6.39 லட்சமும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருந்தது.
இது தொடர்பாக வருமானவரி துறை சார்பில் அஞ்சுகசெல்விக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பதில் அளிக்காததால் கடந்த ஆண்டு எழும்பூரில் உள்ள வருமானவரி கூடுதல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் வருமானவரி துறைசார்பில் ஆஜரான அரசு வக்கீல் ஷீலா, வருமானவரிதுறை அனுப்பிய நோட்டீசுக்கு இதுவரை விளக்கமும், பதிலும் அளிக்காத அஞ்சுகசெல்விக்கு வாரண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மலர்மதி, அஞ்சுகசெல்விக்கு எதிராக வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு கோர்ட்டு தகவல் அனுப்பி உள்ளது. #MKAlagiri