பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன்- 356/6

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்துள்ளது. #AUSvIND
பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன்- 356/6
Published on

இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. நேற்றைய 2-வது நாளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா (66), புஜாரா (54), விராட் கோலி (64), ரகானே (56), விஹாரி (53) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர்கள் டி ஆர்கி ஷார்ட் (74), பிரையன்ட் (62) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதன்பின் வந்தவர்கள் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்க 7-வது விக்கெட்டுக்கு நீல்சன் உடன் ஹார்டை ஜோடி சேர்ந்தார். இருவரும் அரைசதம் அடித்து 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிரிக்கெட ஆஸ்திரேலியா லெவன் 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com