

ஜம்மு காஷ்மீரில் 9 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 73.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், இன்று 8ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. 331 பஞ்சாயத்து தலைவர்கள், 2007 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்து அமைப்புகளில் 43 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 681 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 2633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.