கும்ப்ளேவின் பதவியை நீட்டிப்பதில் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கும்: பிசிசிஐ நிர்வாகக்குழு

கும்ப்ளேவை இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் முடிவில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கும் என நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
கும்ப்ளேவின் பதவியை நீட்டிப்பதில் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கும்: பிசிசிஐ நிர்வாகக்குழு
Published on

கங்குலி, சச்சின், லஷ்மண் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவும் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறது. இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் புதிய பயிற்சியாளரா? அல்லது கும்ப்ளேயின் பதவியை நீடிக்கப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது.

விராட் கோலி சம்மதம் இருந்தால் மட்டுமே அனில் கும்ப்ளேயின் பதவி நீட்டிக்கப்படும் என்று பொதுவாக கருதப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நிர்வாகக்குழு சார்பில் கூறப்படுவதாக வெளிவந்துள்ள செய்தியில், ‘‘இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் அல்லது கும்ப்ளேயின் பதவி காலத்தை நீட்டிப்பதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், கும்ப்ளேயின் பதவிக்காலத்தை நீட்டித்தால், விராட் கோலிக்கும், அவருக்கும் இடையிலான உறவு சுமுகமாக செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மாற்றாக சூழ்நிலை வேறுமாதிரி சென்றால், கேப்டன் சொல்வதை ஏற்றுக் கொள்வதா?, பயிற்சியாளர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? என்ற குழப்பம் வீரர்களிடையே அதிகரித்து விடும். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com