ஆன்லைன் வகுப்பின் போது இருக்கையிலேயே படுத்து உறங்கிய சிறுவன் - வைரல் புகைப்படம்

ஆன்லைன் வகுப்பின்போது ஒரு சிறுவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து உறங்குவது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

ஆனாலும், மாணவர்களின் நலன் மற்றும் கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யும் நோக்கத்தோடு இந்தியா உள்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆல்லைன் வகுப்புகளின்போது பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. அதுபோன்ற சம்பவம் ஒன்று புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

அதில் ’Zoom' வீடியோ கால் மூலம் ஆசிரியர் ஆன்லைனில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது வகுப்பை கவனித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே படுத்து உறங்குவது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது.  

சமூகவலைதளமான டுவிட்டரில் கிரா மெக்டோவெல் என்ற பெண் முதலில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில், 40 நிமிட வீடியோ அழைப்பில் எனது மழலையர் பள்ளியின் மொத்த மனநிலை என பதிவிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது எனற தகவல் வெளியிடப்படவில்லை.

ஆன்லைன் வகுப்பின்போது சிறுவன் தனது இருக்கையிலேயே படுத்து உறங்குவது போன்ற அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் 2020 ஆம் ஆண்டின் மனநிலை இது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com