வில்லாபுரம் பகுதியில் 13-ந்தேதி மின் நிறுத்தம்

வில்லாபுரம் பகுதியில் 13-ந்தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகளை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வில்லாபுரம் பகுதியில் 13-ந்தேதி மின் நிறுத்தம்
Published on

மதுரை:

மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1, 2-வது மெயின் வீதி வரை, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1, 2-வது தெரு வரை, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com