வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் நாளை மின்தடை

வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் நாளை (18-ந்தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
மின்தடை
Published on

மதுரை:

மதுரை வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (18-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1- வது மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாஜலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையங்களிலும் நாளை (18-ந்தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தெற்கு வெளி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணி கோவில் தெரு, காஜிமார் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, பெருமாள் கோவில் தெரு, கட்ராபாளையம், மேலவெளிவீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிகள், கீரைத்துரை, மாகாளிப்பட்டி நல்லமுத்துபிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென் மேரிஸ் பகுதி, தெற்கு வெளிவீதி, பிள்ளையார் பாளையம, தெற்கு மாரட் வீதி, சின்னக்கடை தெரு, மஞ்சனக்காரத்தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர் சாவடி, காமராஜபுரம், வாழைத் தோப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு செயற் பொறியளார் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com