போச்சம்பள்ளியில் பழுதடைந்த மின் கம்பத்தால் கிராம மக்கள் அச்சம்

போச்சம்பள்ளியில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளியில் பழுதடைந்த மின் கம்பத்தால் கிராம மக்கள் அச்சம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜிம்மாண்டியூர் கிராமத்தில் பால்காரன் சின்னசாமி என்பவரது வீட்டருகே இருக்க கூடிய உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மத்தின் 2 மின் கம்பங்களும் பழுதடைந்தது. இதில்  கம்பிகள் தெரியும் வண்ணம் இருப்பதால் உடைந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதன் அருகே கிராம சாலை செல்வதாகவும், குடியிருப்பு வீடுகள் இருப்பதால் அச்சத்துடனேயே அப்பகுதியை கடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். கிராம மக்கள் ஒன்று கூடி மத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று 3 மாத காலமாக முறையிட்டும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மின் வாரியம் அலட்சியமாக இருப்பதாகவும், ஒருவேளை மாற்றினால் அதற்குண்டான செலவுகளை கிராம மக்களே ஏற்க வேண்டுமெனவும் கூறுவதாகவும் தெரிவிக் கின்றனர். 

மேலும் பல இடங்களில் மின் வாரியம், மின் கம்பத்தை மாற்றாமல் உடைந்த மின் கம்பத்தின் மேலே சிமெண்டு கலவை பூசிவிட்டு சென்று விடுகின்றனர், அதுபோல் இதற்கும் செய்யாமல் புதிய மின் கம்பத்தை மாற்றி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். 

இதுகுறித்து போச்சம்பள்ளி செயற்பொறியாளர் வேல் என்பவரிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு மாற்ற ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com